Wednesday, October 7, 2020

கலப்பின திருமணம்!

இளமைச் சிவப்பிற்கும் கரும்பச்சைக்கும் 
இயற்கை மனமுவந்து செய்து வைக்கும் 
இயல்பாக கனிந்த கலப்பின திருமணம்.

Sunday, August 23, 2020

விநாயகா! விடையளியுங்கள்!

விநாயகா, சில ஐயங்கள்
இம்முறை!

வினைத் தீர்ப்பததுடன் இவ்வினாவையும் தீருங்கள்.

உம் பசி ஆறியதா?
கொழுக்கட்டைகளின் எண்ணிக்கை திருப்தி தானே?

மொளனமாக மெல்லமாக போற்றியது 
எட்டியதா செவிக்கு?

 ஊர்வலத்தை எங்கள்
மனக்காட்சியில் பாதுகாப்பாக நடத்தியதால்
குளிர்ந்ததா மனம் உமக்கு?

மண் உருவாய் இருந்திருப்பாய் உம்மை
மஞ்சள் உருமாற்றம் செய்ததில் எழில்  சிதையவில்லையே?

எங்களின் சக்தி குறைந்திற்கலாம் 
அல்ல பக்தி.
எம்முறை சற்று மாறியிருக்கலாம் 
அல்ல பற்று.

விடையளியுங்கள் விக்னேஷ்வரா!
ஆசீர்வதியுங்கள் 
உம்
நிரந்தர முககவசமான 
தும்பிக்கையை எம்
தலை மேல் வைத்து.

Tuesday, July 28, 2020

இரகசியம்!

அமைதியாய் அகத்திற்குள் ஆனந்தமா யிருப்பதின் இரகசியம் என்னவோ!
மேலிருந்து எல்லாம் அவன்
பார்த்து கொள்வான் 
நிச்சயம் என்பதாலோ!

Thursday, July 23, 2020

Sunday, July 19, 2020

இறைவா இறங்கிடு

நாவை நாகமென மடித்து
நாள்தோறும் நளினமாய்
நாற்பது பொய்யுரைத்து
நிந்தனைதான் நிரந்தர
சுதந்திர மெனவாதாடும் 
சிந்தனைக்குள் சீக்கிரமாய்
இறைவா! நீ இறங்கி விடு!

மனிதமே மிகச்சிறந்த 
மார்கமென மதங்களும்
மறைகளும் முறையோடு
முன் மொழிந்தாலும் 
மரத்துப்போன மனங்களை 
மாற்ற வல்ல மாரியாய்
மறவாமல், நீ பொழிந்து விடு!