Sunday, August 23, 2020

விநாயகா! விடையளியுங்கள்!

விநாயகா, சில ஐயங்கள்
இம்முறை!

வினைத் தீர்ப்பததுடன் இவ்வினாவையும் தீருங்கள்.

உம் பசி ஆறியதா?
கொழுக்கட்டைகளின் எண்ணிக்கை திருப்தி தானே?

மொளனமாக மெல்லமாக போற்றியது 
எட்டியதா செவிக்கு?

 ஊர்வலத்தை எங்கள்
மனக்காட்சியில் பாதுகாப்பாக நடத்தியதால்
குளிர்ந்ததா மனம் உமக்கு?

மண் உருவாய் இருந்திருப்பாய் உம்மை
மஞ்சள் உருமாற்றம் செய்ததில் எழில்  சிதையவில்லையே?

எங்களின் சக்தி குறைந்திற்கலாம் 
அல்ல பக்தி.
எம்முறை சற்று மாறியிருக்கலாம் 
அல்ல பற்று.

விடையளியுங்கள் விக்னேஷ்வரா!
ஆசீர்வதியுங்கள் 
உம்
நிரந்தர முககவசமான 
தும்பிக்கையை எம்
தலை மேல் வைத்து.

No comments: