நாவை நாகமென மடித்து
நாள்தோறும் நளினமாய்
நாற்பது பொய்யுரைத்து
நிந்தனைதான் நிரந்தர
சுதந்திர மெனவாதாடும்
சிந்தனைக்குள் சீக்கிரமாய்
இறைவா! நீ இறங்கி விடு!
மனிதமே மிகச்சிறந்த
மார்கமென மதங்களும்
மறைகளும் முறையோடு
முன் மொழிந்தாலும்
மரத்துப்போன மனங்களை
மாற்ற வல்ல மாரியாய்
மறவாமல், நீ பொழிந்து விடு!